Posts

Showing posts from June, 2017

என் போல் தமிழன்

தாய் வழி சோழன் தந்தை வழி பாண்டியன் பிறப்பில் பல்லவன் வளர்ப்பில் சேரன் என் போல் தமிழன் உலகினில் இல்லை தாய் தமிழ் வளர்ப்பான் தமிழ் தாய்யின் பிள்ளை உணவில் சைவம் மனதில் வைணவம் புத்தியில் புத்தம் சித்தியில் சமணம் என் போல் மனிதன் வாழ்ந்திட வேண்டும் கொள்கை இதுவென்று பரப்பிட வேண்டும் யாதும் ஊரே யாவரும் கேளீர் பாரினை சுற்றிட என்னுடன் வாரீர் தமிழனின் பெருமை கோவிலில் தெரியும் மதம் நீயும் மாறினால் எப்படி புரியும்

கலாம் என்றால் ஜெயிக்கலாம்

கலாம் என்றால் ஜெயிக்கலாம் கலாம் பேச்சை கேக்கலாம் கலாம் வழி நடக்கலாம் கலாம் விழியில் பார்க்கலாம் கலாம் கண்ட கனவுகள் இளைஞர்களின் கனவுகள் கலாம் கண்ட இந்தியா ஜெயிப்பதென்ன விந்தையா பிறப்பு ஒரு சம்பவம் இறப்பு ஒரு சரித்திரம் கலாம் அன்று சொன்னது இளைஞர்கள் மனதில் நின்றது கலாம் பாதை போகலாம் விஞ்ஞானி ஆகலாம் மதங்கள் ஒன்றாய் சேர்க்கலாம் தீயவனை ஒழிக்கலாம்  இறைவனிடம் கேக்கலாம் மீண்டும் வேண்டும் ஒர்க்கலாம் ராப்பகலாய் உழைக்கலாம் கலாம் என்றால் ஜெயிக்கலாம்.