கலாம் என்றால் ஜெயிக்கலாம்

கலாம் என்றால் ஜெயிக்கலாம்
கலாம் பேச்சை கேக்கலாம்
கலாம் வழி நடக்கலாம்
கலாம் விழியில் பார்க்கலாம்

கலாம் கண்ட கனவுகள்
இளைஞர்களின் கனவுகள்
கலாம் கண்ட இந்தியா
ஜெயிப்பதென்ன விந்தையா

பிறப்பு ஒரு சம்பவம்
இறப்பு ஒரு சரித்திரம்
கலாம் அன்று சொன்னது
இளைஞர்கள் மனதில் நின்றது

கலாம் பாதை போகலாம்
விஞ்ஞானி ஆகலாம்
மதங்கள் ஒன்றாய் சேர்க்கலாம்
தீயவனை ஒழிக்கலாம்

 இறைவனிடம் கேக்கலாம்
மீண்டும் வேண்டும் ஒர்க்கலாம்
ராப்பகலாய் உழைக்கலாம்
கலாம் என்றால் ஜெயிக்கலாம்.

Comments

Popular posts from this blog

கொரோனா Vijay Song

என் போல் தமிழன்