என் போல் தமிழன்
தாய் வழி சோழன்
தந்தை வழி பாண்டியன்
பிறப்பில் பல்லவன்
வளர்ப்பில் சேரன்
என் போல் தமிழன்
உலகினில் இல்லை
தாய் தமிழ் வளர்ப்பான்
தமிழ் தாய்யின் பிள்ளை
தந்தை வழி பாண்டியன்
பிறப்பில் பல்லவன்
வளர்ப்பில் சேரன்
என் போல் தமிழன்
உலகினில் இல்லை
தாய் தமிழ் வளர்ப்பான்
தமிழ் தாய்யின் பிள்ளை
உணவில் சைவம்
மனதில் வைணவம்
புத்தியில் புத்தம்
சித்தியில் சமணம்
என் போல் மனிதன்
வாழ்ந்திட வேண்டும்
கொள்கை இதுவென்று
பரப்பிட வேண்டும்
யாதும் ஊரே
யாவரும் கேளீர்
பாரினை சுற்றிட
என்னுடன் வாரீர்
தமிழனின் பெருமை
கோவிலில் தெரியும்
மதம் நீயும் மாறினால்
எப்படி புரியும்
Comments
Post a Comment